நெல்லையில் தனியார் நிதி நிறுவனம் முற்றுகை


நெல்லையில் தனியார் நிதி நிறுவனம் முற்றுகை
x
தினத்தந்தி 14 Oct 2020 5:13 AM IST (Updated: 14 Oct 2020 5:13 AM IST)
t-max-icont-min-icon

கடனுக்கான அசல், வட்டியை சேர்த்து செலுத்திய பிறகும் கூடுதல் பணம் கேட்பதாக கூறி அந்த நிதி நிறுவனத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

நெல்லை,

நெல்லை எஸ்.என்.ஹை ரோட்டில் ஒரு வங்கியின் மாடியில் தனியார் நிதி நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிதி நிறுவனத்தில் கோபாலசமுத்திரம் அருகே உள்ள கொத்தன்குளத்தை சேர்ந்த ஒருவர் கடன் பெற்றிருந்தார். இந்த நிலையில் கடனுக்கான அசல், வட்டியை சேர்த்து செலுத்திய பிறகும் கூடுதல் பணம் கேட்பதாக கூறி அந்த நிதி நிறுவனத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தமிழர் உரிமை மீட்பு களம் லெனின், மக்கள் அதிகாரம் அன்பு, திராவிட தமிழர் கட்சி இளமாறன் கோபால், தமிழர் விடுதலைக்களம் சிவா மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கலந்து கொண்டனர். அவர்கள், நுண் நிதி நிறுவனங்களில் வழங்கப்பட்ட கடன் தொகையை கொரோனா காலத்தில் தள்ளுபடி செய்ய வேண்டும், வட்டி மற்றும் அபராத வட்டி வசூலிப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் வங்கி நிர்வாகம் மற்றும் போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Next Story