நெல்லையில் கோர்ட்டு ஊழியர் உள்பட 60 பேருக்கு கொரோனா
நெல்லையில் கோர்ட்டு ஊழியர் உள்பட 60 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தென்காசி, தூத்துக்குடியில் 86 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் நேற்று 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் நெல்லை மாநகர பகுதியில் 20 பேர், நாங்குநேரி பகுதியில் 8 பேர், அம்பை, பாப்பாகுடி, களக்காடு, சேரன்மாதேவி ஆகிய பகுதிகளை சேர்ந்த தலா 2 பேர், மானூர் பகுதியில் 3 பேர், பாளையங்கோட்டை புறநகர் பகுதியில் 13 பேர், ராதாபுரம், வள்ளியூர் பகுதிகளை சேர்ந்த தலா 4 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் வள்ளியூர் கோர்ட்டு ஊழியர் ஒருவரும், 100 நாள் வேலை திட்டத்தில் பாளையங்கோட்டை புறநகர் பகுதியில் பணியாற்றிய தொழிலாளர்கள் 7 பேரும் அடங்குவர்.
இவர்கள் அனைவரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்றுடன் நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 633 ஆக அதிகரித்துள்ளது. இதில் 12 ஆயிரத்து 752 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று ஒரே நாளில் 62 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 677 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 204 பேர் இறந்துள்ளனர்.
தென்காசி-தூத்துக்குடி
தென்காசி மாவட்டத்தில் புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் இதுவரை 7 ஆயிரத்து 661 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 7 ஆயிரத்து 323 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 190 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 148 பேர் இறந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 55 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 236 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 13 ஆயிரத்து 576 பேர் முழுமையாக குணமடைந்து உள்ளனர். 535 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 125 பேர் இறந்து உள்ளனர்.

Related Tags :
Next Story