புதுச்சேரியில் மேலும் 246 பேருக்கு கொரோனா
புதுச்சேரியில் மேலும் 246 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 4 ஆயிரத்து 521 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 246 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 287 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரே ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளார்.
புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 2 லட்சத்து 46 ஆயிரத்து 59 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அவர்களில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 412 பேருக்கு தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
உயிரிழப்பு
32 ஆயிரத்து 245 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 4 ஆயிரத்து 525 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். 1,640 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 2 ஆயிரத்து 885 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
27 ஆயிரத்து 152 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 568 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 471 பேர் புதுச்சேரியையும், 51 பேர் காரைக்காலையும், 42 பேர் ஏனாமையும், 4 பேர் மாகியையும் சேர்ந்தவர்களாவர். புதுவையில் உயிரிழப்பு 1.76 சதவீதமாகவும், குணமடைவது 84.21 சதவீதமாகவும் உள்ளது.

Related Tags :
Next Story