ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 127 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஈரோடு,
தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்து வருகிறது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது. சில மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் மொத்த பாதிப்பு குறைந்து காணப்படுகிறது. அதேசமயம் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரசுக்கு தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
ஒருசில மாவட்டங்களில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதிக பாதிப்பை ஏற்படுத்தி வந்த கொரோனா தற்போது தணிந்து இருப்பதைபோல, ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் எப்போது குறையும் என்கிற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
127 பேர்
இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் ஈரோடு மாவட்டத்தில் 127 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்து 648 ஆக உயர்ந்தது. அதேசமயம் 131 பேர் நோய் தொற்றில் இருந்து நேற்று குணமடைந்தார்கள். இதுவரை மொத்தம் 7 ஆயிரத்து 522 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 1,022 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும், கொரோனாவுக்கு இதுவரை 104 பேர் உயிரிழந்து உள்ளனர்.
கொரோனா பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், அடிக்கடி கைகளை கழுவி சுகாதாரத்தை கடைபிடித்தல் போன்ற நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

Related Tags :
Next Story