மாவட்ட செய்திகள்

அதிகாரத்தை பயன்படுத்தி எங்களை கட்டுப்படுத்த முயற்சி இடைத்தேர்தலில் பா.ஜனதாவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் சித்தராமையா பேட்டி + "||" + People will teach a lesson to the BJP in the by-elections trying to control us by using power

அதிகாரத்தை பயன்படுத்தி எங்களை கட்டுப்படுத்த முயற்சி இடைத்தேர்தலில் பா.ஜனதாவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் சித்தராமையா பேட்டி

அதிகாரத்தை பயன்படுத்தி எங்களை கட்டுப்படுத்த முயற்சி இடைத்தேர்தலில் பா.ஜனதாவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் சித்தராமையா பேட்டி
அதிகாரத்தை பயன்படுத்தி எங்களை கட்டுப்படுத்த முயற்சி செய்யும் பா.ஜனதாவுக்கு இடைத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று சித்தராமையா கூறியுள்ளார்.
பெங்களூரு,

பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் குசுமா நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். அப்போது அவருடன் நானும் வந்தேன். எங்களை வலுக்கட்டாயமாக தடுக்க போலீசார் முயற்சி செய்தனர். எங்களின் உதவியாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது கர்நாடக அரசின் சர்வாதிகார, ஆணவத்தை காட்டுகிறது. அக்கட்சி காங்கிரசை கண்டு பயந்துபோய் உள்ளது. தேர்தல் அதிகாரிகளின் கண்காணிப்பில் நடைபெற வேண்டும். போலீசார் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்.


இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையத்தை ஓரங்கட்டிவிட்டு, போலீசார் தன்னிச்சையாக செயல்பட்டு வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன் பின்னணியில் அரசின் தலையீடு உள்ளது வெளிப்படையாக தெரிகிறது. பா.ஜனதா வேட்பாளர் மனு தாக்கல் செய்தபோது, தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் கொரோனா விதிமுறைகளை மீறினர்.

பாடம் புகட்டுவார்கள்

இதை பார்த்தும் போலீசார் கண்களை மூடிக் கொண்டிருந்தனர். இது கண்டிக்கத்தக்கது. இந்த எல்லா அம்சங்களையும் உள்ளடக்கி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளோம். காங்கிரஸ் கட்சியை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத பா.ஜனதா, வரும் நாட்களில் இதேபோல் அதிகாரத்தை பயன்படுத்தி எங்களை கட்டுப்படுத்த முயற்சி செய்யும். இதற்கு இடைத்தேர்தலில் பா.ஜனதாவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. “வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி” அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
“வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி“ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
2. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை வந்துவிடக்கூடாது என்பதால் குஷ்பு கைது அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை வந்து விடக்கூடாது என்பதற்காக குஷ்பு கைது செய்யப்பட்டார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
3. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி
அடுத்த ஆண்டு (2021) தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்றும், இலவசமாக வழங்குவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.
4. சட்டசபை இடைத்தேர்தலையொட்டி ஆர்.ஆர்.நகரில் சித்தராமையா பிரசாரம் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்
சட்டசபை இடைத்தேர்தலையொட்டி ஆர்.ஆர்.நகரில் சித்தராமையா பிரசாரம் செய்து காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்.
5. ‘இந்திய அணியில் இடம் எதிர்பார்க்காத ஒன்று’ வருண்சக்ரவர்த்தி பேட்டி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் முதல்முறையாக தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண்சக்ரவர்த்தி சேர்க்கப்பட்டு உள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை