மாவட்ட செய்திகள்

தாம்பரம் அருகே மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி 2 இளம்பெண்கள் பலி + "||" + 2 teenagers killed after getting stuck in the wheel of a city bus near Tambaram

தாம்பரம் அருகே மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி 2 இளம்பெண்கள் பலி

தாம்பரம் அருகே மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி 2 இளம்பெண்கள் பலி
தாம்பரம் அருகே மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி 2 இளம்பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.
தாம்பரம்,

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் வேளச்சேரி சாலையில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்ற இடங்களில் சாலைகள் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது.

இந்தநிலையில் நேற்று இரவு ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த பெருங்களத்தூரை சேர்ந்த மேரி ரோஸ்லின்(வயது 20), நடுவீரப்பட்டு பகுதியைச்சேர்ந்த கலைவாணி(19) ஆகியோர் சேலையூர் தனியார் வங்கி அருகே வரும்போது குண்டும் குழியுமான சாலையில் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தனர்.


பஸ் சக்கரத்தில் சிக்கி பலி

அப்போது வேளச்சேரியில் இருந்து மேற்கு தாம்பரம் நோக்கி சென்ற மாநகர பஸ்சின் பின்பக்க சக்கரம் கீழே விழுந்த ரோஸ்லின், கலைவாணி இருவர் மீதும் ஏறி இறங்கியது. மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்கள் இருவரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் பலியான இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய மாநகர பஸ் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆயுதபூஜையன்று நொய்யல் ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி
ஆயுத பூஜையன்று மங்கலம் பகுதியில் நொய்யல் ஆற்றில் மூழ்கி வாலிபர் பலியானார்.
2. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலி: இறந்தவர்களின் எண்ணிக்கை 102 ஆக உயர்வு 37 பேருக்கு தொற்று
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர்கள் உள்பட 3 பேர் பலியான நிலையில், மாவட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் 37 பேருக்கு நேற்று தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
3. வாசுதேவநல்லூர் அருகே, வயலில் உழுதபோது பரிதாபம்: கிணற்றுக்குள் டிராக்டருடன் விழுந்த விவசாயி பலி
வாசுதேவநல்லூர் அருகே வயலில் உழவு செய்தபோது கிணற்றுக்குள் டிராக்டருடன் விழுந்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.
4. இருசக்கர வாகனத்தில் சென்றபோது 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து விழுந்து கணவன்-மனைவி பலி
பெரம்பூரில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது சுமார் 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து விழுந்து கணவன்-மனைவி பரிதாபமாக இறந்தனர்.
5. உடன்குடியில் மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலி மாடு குறுக்கே வந்ததால் பரிதாபம்
உடன்குடியில், மாடு குறுக்கே வந்ததால் மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபர் மரத்தில் மோதி பரிதாபமாக இறந்தார்.