நெல்லை, தூத்துக்குடியில் மேலும் 94 பேருக்கு கொரோனா தென்காசியில் முதியவர் சாவு
நெல்லை மாவட்டத்தில் மேலும் 51 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 733 ஆக உயர்ந்துள்ளது.
தென்காசி,
நெல்லை மாவட்டத்தில் மேலும் 51 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 733 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு இதுவரை 205 பேர் பலியாகி உள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் 23 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 690 ஆக உயர்ந்துள்ளது.
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 74 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இவருடன் சேர்த்து தென்காசி மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 149 பேர் பலியாகி உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளை சேர்ந்த 43 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 325 ஆக உயர்ந்து உள்ளது.

Related Tags :
Next Story