மேலும் 287 பேருக்கு தொற்று புதுச்சேரியில் 2½ லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை


மேலும் 287 பேருக்கு தொற்று புதுச்சேரியில் 2½ லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 17 Oct 2020 3:51 AM IST (Updated: 17 Oct 2020 3:51 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி மாநிலத்தில் 2½ லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று மேலும் 287 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலத்தில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 4 ஆயிரத்து 287 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 287 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 306 பேர் குணமடைந்துள்ளனர். ஒரே ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளார்.

புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 2 லட்சத்து 55 ஆயிரத்து 195 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 2 லட்சத்து 18 ஆயிரத்து 965 பேருக்கு தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டு உள்ளது.

571 பேர் உயிரிழப்பு

32 ஆயிரத்து 766 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,653 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 2 ஆயிரத்து 871 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

27 ஆயிரத்து 671 பேர் குணமடைந்துள்ளனர். 571 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 473 பேர் புதுச்சேரியையும், 52 பேர் காரைக்காலையும், 42 பேர் ஏனாமையும், 4 பேர் மாகியையும் சேர்ந்தவர்கள் ஆவர். புதுவையில் உயிரிழப்பு 1.74 சதவீதமாகவும், குணமடைவது 84.45 சதவீதமாகவும் உள்ளது.

Next Story