மாவட்ட செய்திகள்

மதுரை அருகே போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை + "||" + Near Madurai Policeman Suicide by drinking poison

மதுரை அருகே போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை

மதுரை அருகே போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை
மதுரை அருகே போலீஸ் காரர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
அலங்காநல்லூர்,

மதுரை அருகே உள்ள குலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன்(வயது 33). இவர் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி இளமதி(27). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இந்தநிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. அதனால் மனவருத்தம் அடைந்த ராஜேஷ் கண்ணன் சொந்த ஊரான குலமங்கலத்திற்கு வந்துள்ளார். திடீரென அங்கு விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.


இதைதொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மதுரை அருகே பயங்கரம்: 2 பேரை அடுத்தடுத்து கொன்ற கொடூர கும்பல் ஆட்டோ டிரைவர் மாயம் பற்றிய விசாரணையில் 2 சம்பவங்களும் அம்பலம்
மதுரை அருகே 2 பேரை அடுத்தடுத்து 5 பேர் கும்பல் கொலை செய்தது. ஆட்டோ டிரைவர் மாயம் பற்றிய போலீஸ் விசாரணையில் 2 சம்பவங்களும் அம்பலமானது.