ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 111 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 111 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தினமும் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நோய் தொற்று ஏற்படுவதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் மொத்த பாதிப்பு 9 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
இந்தநிலையில் நேற்று வெளியான மாநில சுகாதாரத்துறை பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 111 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்து 131 ஆக உயர்ந்தது.
113 பேர் பலி
கொரோனாவில் இருந்து நேற்று ஒரே நாளில் 122 பேர் குணமடைந்தார்கள். இதனால் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 ஆயிரத்து 978 ஆக உயர்ந்தது. மேலும், 1,040 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 113 பேர் பலியாகி உள்ளனர்.

Related Tags :
Next Story