மராட்டியத்தில் புதிதாக 9 ஆயிரத்து 60 பேருக்கு கொரோனா தொற்று
மராட்டியத்தில் புதிதாக 9 ஆயிரத்து 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 9 ஆயிரத்து 60 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் இதுவரை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 95 ஆயிரத்து 381 ஆக உயர்ந்து உள்ளது.
இதில் 13 லட்சத்து 69 ஆயிரத்து 810 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று மட்டும் 11 ஆயிரத்து 204 பேர் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி உள்ளனா். மாநிலத்தில் தொற்று பாதித்தவர்களில் 85.56 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 82 ஆயிரத்து 973 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் புதிதாக 150 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதனால் மராட்டியத்தில் வைரஸ் நோய்க்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 785 ஆக உயர்ந்து உள்ளது.
மும்பை
மும்பை மாநகராட்சி பகுதியில் புதிதாக 1,600 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நகரில் பாதிக்கப்பட்டர்வர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 41 ஆயிரத்து 935 ஆக உள்ளது. நகரில் மேலும் 46 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை மும்பையில் வைரஸ் நோய்க்கு 9 ஆயிரத்து 785 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Related Tags :
Next Story