வாடிக்கையாளரிடம் ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய கூட்டுறவு வங்கி தலைவர் கைது


வாடிக்கையாளரிடம் ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய கூட்டுறவு வங்கி தலைவர் கைது
x
தினத்தந்தி 20 Oct 2020 2:35 AM IST (Updated: 20 Oct 2020 2:35 AM IST)
t-max-icont-min-icon

வாடிக்கையாளரிடம் ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய கூட்டுறவு வங்கி தலைவர் கைது செய்யப்பட்டார்.

அவுரங்காபாத்,

பீட் மாவட்டம் அருகே உள்ள பார்லி பகுதியில் வித்யாநாத் நகர கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது.

இந்த வங்கியின் தலைவராக அசோக் பான்னாலால் ஜெயின் என்பவர் இருந்து வருகிறார். இந்த நிலையில் அந்த கூட்டுறவு வங்கின் வாடிக்கையாளர் ஒருவர் தனது கணக்கில் உள்ள ரூ. 2 கோடியே 50 லட்சத்தை அனுமதிக்கும்படி கூறி கூட்டுறவு வங்கியின் தலைவர் அசோக் பான்னாலால் ஜெயினை சந்தித்து கோரிக்கை வைத்தார்.

ஆனால் அந்த தொகையை அனுமதிக்கவேண்டும் எனில் தனக்கு ரூ. 15 லட்சம் லஞ்சமாக தரவேண்டும் என அவர் கூறியதாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார்.

கையும், களவுமாக கைது

இதையடுத்து அசோக் பான்னாலால் ஜெயினை கையிம், களவுமாக பிடிக்க திட்டமிட்டனர். இதன்படி வாடிக்கையாரிடம் அவரை நேரில் சந்தித்து லஞ்ச பணத்தை கொடுக்குமாறு தெரிவித்தனர்.

அவர்கள் தெரிவித்த யோசனைப்படி கூட்டுறவு வங்கி தலைவர் அசோக் பான்னாலால் ஜெயினை அவருக்கு சொந்தமான உணவு தானியக் கடையில் சென்று சந்தித்த வங்கி வாடிக்கையாளர், அவர் கேட்ட லஞ்சப்பணத்தில் ரூ.10 லட்சத்தை முன்பணமாக கொடுத்தார்.

இதை மறைந்திருந்து கண்காணித்த போலீசார் அசோக் பான்னாலால் ஜெயின் அந்த பணத்தை பெற்றதும் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story