வக்கீல்களை மின்சார ரெயில்களில் அனுமதிக்க தயார் ஐகோர்ட்டில், மாநில அரசு தகவல்


வக்கீல்களை மின்சார ரெயில்களில் அனுமதிக்க தயார் ஐகோர்ட்டில், மாநில அரசு தகவல்
x
தினத்தந்தி 19 Oct 2020 9:10 PM GMT (Updated: 19 Oct 2020 9:10 PM GMT)

வக்கீல்களை மின்சார ரெயில்களில் அனுமதிக்க அரசு சாதகமாக உள்ளது என மும்பை ஐகோர்ட்டில் மாநில அரசு தொிவித்து உள்ளது.

மும்பை,

மும்பையில் அத்தியாவசிய பணியாளர்கள் மற்றும் அரசு, வங்கி ஊழியர்களுக்காக மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்களில் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என ரெயில்வே நிர்வாகத்திற்கு மாநில அரசு கோரிக்கை விடுத்து உள்ளது.

இதற்கிடையே மின்சார ரெயில்களில் தங்களையும் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என வக்கீல்கள் தொடர்ந்த பொதுநலன் மனு மீதான விசாரணை மும்பை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.

சாதகமாக உள்ளது

இந்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி திபான்கர் தத்தா மற்றும் நீதிபதி குல்கர்னி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்தது. விசாரணையின் போது வக்கீல்களை மின்சார ரெயில்களில் அனுமதிப்பது குறித்து அரசு தரப்பில் வக்கீல் அசுதோஷ் கும்பகோனி கூறுகையில், “அனுமதியை தவறாக பயன்படுத்த கூடாது என்ற நிபந்தனையுடன், வேலை நிமித்தமாக மட்டும் வக்கீல்களை மின்சார ரெயிலில் செல்ல அனுமதிப்பதில் அரசு சாதகமாக உள்ளது” என்றார்.

Next Story