வாய்மேடு அருகே, காதல் விவகாரத்தில், வாலிபர் வெட்டிக்கொலை - ஒருவர் கைது; தே.மு.தி.க. பிரமுகருக்கு வலைவீச்சு


வாய்மேடு அருகே, காதல் விவகாரத்தில், வாலிபர் வெட்டிக்கொலை - ஒருவர் கைது; தே.மு.தி.க. பிரமுகருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 19 Oct 2020 10:15 PM GMT (Updated: 20 Oct 2020 12:58 AM GMT)

வாய்மேடு அருகே காதல் விவகாரத்தில் வாலிபர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய தே.மு.தி.க. பிரமுகரை வலைவீசி தேடிவருகின்றனர்.

வாய்மேடு,

நாகை மாவட்டம் வாய்மேடு சேனாதிக்காடு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் செல்வக்குமார்(வயது 29). இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணின் சகோதரர் கார்த்தி. இவர், கரியாப்பட்டினத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கார்த்தி சில நாட்களுக்கு முன்பு தனது பகுதியை சேர்ந்த மணிகண்டன்(23) என்பவரின் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு காதலியை சந்திப்பதற்காக கரியாப்பட்டினம் சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணின் வீட்டாருக்கும், கார்த்திக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் மோட்டார் சைக்கிளை கார்த்திக்கிற்கு இரவல் கொடுத்த மணிகண்டனுக்கும், செல்வகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த செல்வக்குமாரை, மணிகண்டன் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய வேதாரண்யம் ஒன்றிய தே.மு.தி.க. செயலாளர் செல்லத்துரையை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். காதல் விவகாரத்தில் வாலிபர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story