தேசிய பெண்கள் ஆணைய தலைவர் ரேகா சர்மா, கவர்னருடன் சந்திப்பு மராட்டியத்தில் பெண்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து பேசினார்


தேசிய பெண்கள் ஆணைய தலைவர் ரேகா சர்மா, கவர்னருடன் சந்திப்பு மராட்டியத்தில் பெண்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து பேசினார்
x
தினத்தந்தி 20 Oct 2020 9:01 PM GMT (Updated: 20 Oct 2020 9:01 PM GMT)

தேசிய பெண்கள் ஆணைய தலைவர் ரேகா சர்மா, கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து பேசினார்.

மும்பை,

தேசிய பெண்கள் ஆணைய தலைவர் ரேகா சர்மா நேற்று மரியாதை நிமித்தமாக கவர்னா் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து பேசினார். அப்போது அவர் பல்வேறு மாநிலத்தில் பெண்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து கவர்னாிடம் ஆலோசனை நடத்தி உள்ளார்.

இது குறித்து தேசிய பெண்கள் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கண்காணிப்பு கேமரா

கவர்னருடனான சந்திப்பின் போது மராட்டியத்தில் ‘லவ் ஜிகாத்‘ சம்பவங்கள் அதிகரித்து உள்ளது குறித்து கூறியுள்ளார். இதேபோல மராட்டியத்தில் மாநில பெண்கள் ஆணையத்திற்கு தலைவர் நியமிக்கப்படாததால், சுமார் 4 ஆயிரம் புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்படாமல் உள்ளது குறித்து கவர்னரிடம் தெரிவித்து உள்ளார்.

இதேபோல கொரோனா மையங்களில் பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகும் சம்பவங்களை தடுக்க அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் எனவும் ரேகா சர்மா, கவர்னரிடம் வலியுறுத்தி இருக்கிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story