மாவட்ட செய்திகள்

மாகியில் கொரோனா உயிரிழப்பு 5 ஆக உயர்வு + "||" + Corona death toll rises to 5 in Magi

மாகியில் கொரோனா உயிரிழப்பு 5 ஆக உயர்வு

மாகியில் கொரோனா உயிரிழப்பு 5 ஆக உயர்வு
மாகி பிராந்தியத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 4 ஆயிரத்து 13 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 206 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 252 பேர் குணமடைந்துள்ளனர். கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் லாஸ்பேட்டை குமரன்நகரை சேர்ந்த 56 வயது ஆணும், மாகியில் 90 வயது மூதாட்டியும் உயிரிழந்துள்ளனர். அதாவது கடந்த பல நாட்களாக மாகியில் உயிரிழப்பு என்பது இல்லாமல் இருந்தநிலையில் நேற்று ஒருவர் இறந்துள்ளார்.


தொடர் சிகிச்சை

புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 2 லட்சத்து 70 ஆயிரத்து 189 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 33 ஆயிரத்து 452 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

அவர்களில் 4 ஆயிரத்து 100 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அதாவது 1,521 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 2 ஆயிரத்து 579 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 28 ஆயிரத்து 774 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை 577 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 476 பேர் புதுச்சேரியை சேர்ந்தவர்கள். 52 பேர் காரைக்காலையும், 42 பேர் ஏனாமையும், 5 பேர் மாகியையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

புதுவையில் உயிரிழப்பு என்பது 1.72 சதவீதமாகவும், குணமடைவது 86.02 சதவீதமாகவும் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு மாவட்டத்தில் 48 பேருக்கு கொரோனா; முதியவர் பலி
ஈரோடு மாவட்டத்தில் 48 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.
2. அரியலூரில் 5 பேருக்கு கொரோனா பெரம்பலூரில் பாதிப்பு இல்லை
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை.
3. அரியலூரில் 4 பேருக்கு கொரோனா பெரம்பலூரில் 2 பேர் பாதிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஆலத்தூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
4. கொரோனாவை தடுப்பதற்கு ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசி கண்டுபிடிப்பு
கொரோனாவை தடுப்பதற்கு ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
5. உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பா.ம.க.வினர் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.