வீட்டுக்கு அழைத்து பள்ளி மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது


வீட்டுக்கு அழைத்து பள்ளி மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 21 Oct 2020 4:09 AM IST (Updated: 21 Oct 2020 4:09 AM IST)
t-max-icont-min-icon

வீட்டுக்கு அழைத்து பள்ளி மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தாம்பரம்,

செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் அடுத்த மேலச்சேரி மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 26). இவர் காஞ்சீபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த கணவரை இழந்த 35 வயது பெண் தனது ஒரே மகனோடு வசித்து வருகிறார். இவர் அருகில் உள்ள சத்துணவு மையத்தில் பணியாற்றி வருகிறார்.

கடந்த 3 மாதத்திற்கு முன்பு கார்த்திக் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று நான் ஆன்லைன் வகுப்பு எடுத்து வருகிறேன். உங்கள் மகனை என்னுடைய வீட்டுக்கு அனுப்பி வையுங்கள் நான் அவனுக்கு ஆன்லைன் வகுப்பு சொல்லி தருகிறேன் என்று கூறியிருக்கிறார்.

அதை ஏற்றுக்கொண்ட அந்த பெண் செங்கல்பட்டில் அரசு உதவிபெறும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் தன்னுடைய மகனுக்கு தற்போது பள்ளிகள் திறக்கப்படாததால் கார்த்திக் வீட்டுக்கு ஆன்லைன் வகுப்புக்கு அனுப்பி வைத்தார்.

போக்சோ சட்டத்தில் கைது

கடந்த 3 மாதங்களாக ஆன்லைன் வகுப்புக்கு சென்ற மகன் சில நாட்களாகவே வீட்டில் சகஜமான நிலையில் இல்லாமல் சோர்வுடன் காணப்பட்டான். அடிக்கடி வாந்தியெடுத்து கொண்டு இருப்பதை பார்த்த அந்த பெண் தன்னுடைய மகனிடம் இது குறித்து விசாரித்தார்.

கார்த்திக் தனது உடல் ஆசைக்காக 13 வயது சிறுவன் என்றும் பாராமல் கடுமையாக தாக்கி வலுக்கட்டாயமாக பாலி யல் துன்புறுத்தலில் ஈடுபட்டு அதை புகைப்படம் எடுத்து மிரட்டியது தெரியவந்தது.

இதனால் பதறிபோன அந்த பெண், கார்த்திக்கின் வீட்டுக்கு சென்றார். அங்கு கார்த்திக் குளித்து கொண்டிருந்த நேரத்தை பயன்படுத்தி அவரது செல்போனை சோதனை செய்தார். தன்னுடைய மகன் சம்மந்தமாக இருந்த அனைத்து புகைப்படங்களையும் தனது செல்போனுக்கு அனுப்பி வைத்து சாமர்த்தியமாக அனைத்து ஆதாரங்களுடன் பாலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் கார்த்திக்கை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
1 More update

Next Story