தமிழகத்தில் ஒரே நாளில் 3,094 பேருக்கு கொரோனா தொற்று 9-வது நாளாக பாதிப்பு குறைந்தது


தமிழகத்தில் ஒரே நாளில் 3,094 பேருக்கு கொரோனா தொற்று 9-வது நாளாக பாதிப்பு குறைந்தது
x
தினத்தந்தி 21 Oct 2020 4:12 AM IST (Updated: 21 Oct 2020 4:12 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3,094 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து 9-வது நாளாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் நேற்று 78 ஆயிரத்து 903 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,830 ஆண்கள், 1,264 பெண்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 94 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 12 வயதுக்கு உட்பட்ட 2 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 17 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 857 பேரும், கோவையில் 263 பேரும், செங்கல்பட்டில் 191 பேரும் குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் 12 பேரும், தென்காசி, பெரம்பலூரில் தலா 8 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 88 லட்சத்து 58 ஆயிரத்து 983 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 6 லட்சத்து 94 ஆயிரத்து 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த பட்டியலில் 4 லட்சத்து 19 ஆயிரத்து 46 ஆண்களும், 2 லட்சத்து 74 ஆயிரத்து 952 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 32 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 25 ஆயிரத்து 75 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 86 ஆயிரத்து 44 முதியவர்களும் அடங்குவர்.

50 பேர் உயிரிழப்பு

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 31 பேரும், தனியார் மருத்துவமனையில் 19 பேரும் என 50 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.

இதில் சென்னையில் 11 பேரும், திருப்பூரில் 5 பேரும், காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் தலா 4 பேரும், கோவை, தர்மபுரி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், ராமநாதபுரத்தில் தலா இருவரும், விருதுநகர், வேலூர், திருச்சி, நெல்லை, திருவாரூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், சேலம், மதுரை, கடலூரில் தலா ஒருவரும் என 21 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 10 ஆயிரத்து 741 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

4 ஆயிரத்து 403 பேர்

‘டிஸ்சார்ஜ்’

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 4 ஆயிரத்து 403 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,236 பேரும், செங்கல்பட்டில் 297 பேரும், சேலத்தில் 241 பேரும் அடங்குவர்.

இதுவரையில் 6 லட்சத்து 46 ஆயிரத்து 555 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 36 ஆயிரத்து 734 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து 9-வது நாளாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story