முழு வீச்சில் செயல்பட தொடங்கிய மூக்கையூர் துறைமுகம் - மீனவர்கள் மகிழ்ச்சி


முழு வீச்சில் செயல்பட தொடங்கிய மூக்கையூர் துறைமுகம் - மீனவர்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 21 Oct 2020 10:30 AM IST (Updated: 21 Oct 2020 11:04 AM IST)
t-max-icont-min-icon

சாயல்குடி அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்கடல் துறைமுகத்திற்கு 24 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வந்துள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சாயல்குடி,

சாயல்குடி அருகே உள்ள மூக்கையூர் கிராமத்தில் ரூ.128 கோடியில் 250 ஆழ்கடல் மீன்பிடி படகுகள், 200 நாட்டுப் படகுகள் நிறுத்தும் வகையில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. துறைமுகத்தில் படகுகள் நிறுத்தும் இடத்தில் மண் திட்டு, மேடுகள், பாறைகள் இருந்ததால் ஆழ்கடல் மீன்பிடி படகுகளை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

திறப்பு விழா கண்டு ஓராண்டை கடந்தும் துறைமுகம் முழுவீச்சில் செயல்படவில்லை. இதையடுத்து மணல் திட்டுகள், பாறைகள் அகற்றப்பட்டு துறைமுகம் ஆழப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது 24 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் இங்கிருந்து மீன்பிடி தொழிலுக்கு சென்று வருகின்றன.

துறைமுகம் தற்போது முழுவீச்சில் செயல்பாட்டிற்கு வந்துள்ளதால் தற்போது 24 ஆழ்கடல் மீன்பிடி படகுகள், 15 இழுவை படகுகள், 110 நாட்டுப் படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு பிறகு திரும்பிய ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் பல்வேறு வகையான ரகங்களில் தலா 8 டன்னுக்கும் குறையாமல் மீன்கள் கிடைப்பதால் அப்பகுதி மீனவர்கள் அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

Next Story