3 மாதங்களில் 45 பேர் குண்டர் சட்டத்தில் கைது போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தகவல்


3 மாதங்களில் 45 பேர் குண்டர் சட்டத்தில் கைது போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தகவல்
x
தினத்தந்தி 21 Oct 2020 5:27 PM GMT (Updated: 21 Oct 2020 5:27 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில், கடந்த 3 மாதங்களில் 45 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளதாக, போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் மட்டும் கொலை, கொலை முயற்சி போன்ற பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 29 பேரும், பாலியல் வன்முறை வழக்குளில் சம்பந்தபட்பட 7 பேரும், கஞ்சா போன்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 7 பேரும் மற்றும் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேர் ஆக மொத்தம் 45 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

கஞ்சா பறிமுதல்

இதே போன்று மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 837 பேர் மீது குற்றவியல் நடைமுறைச்சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. கடந்த 3 மாதத்தில் மட்டும் கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாக 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் 84 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.7 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 73 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

நடவடிக்கை

மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு சட்டம், ஒழுங்குக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு சாதி, மத மோதல்களை தூண்டுபவர்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story