தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாநகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சிதம்பரநகரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் மருத்துவ கல்வியில் கிராமப்புற மாணவர்களுக்கு 7½ சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் திட்டத்துக்கு கவர்னர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும், அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசுக்கு தாரை வார்க்க முயற்சிக்கும் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
கலந்து கொண்டவர்கள்
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரசல், பேச்சிமுத்து, மாவட்ட குழு உறுப்பினர்கள் குமாரவேல், சீனிவாசன், மாரியப்பன், காசி, ஒன்றிய செயலாளர் சங்கரன், புறநகர செயலாளர் ராஜா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story