மாவட்ட செய்திகள்

குற்றாலத்தில் வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.45 லட்சம் கொள்ளை 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை + "||" + Police have arrested five persons for robbing a teenager of Rs 45 lakh by brandishing a knife at him

குற்றாலத்தில் வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.45 லட்சம் கொள்ளை 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை

குற்றாலத்தில் வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.45 லட்சம் கொள்ளை 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை
குற்றாலத்தில் வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.45 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தொடர்பாக 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தென்காசி,

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வள்ளுவன் புரத்தைச் சேர்ந்தவர் அப்துல் கபூர் (வயது 35). இவர் கார்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள நன்னகரத்தைச் சேர்ந்த நாகூர் மீரான் (43) என்பவருக்கு சொந்தமான வீட்டை விலைக்கு வாங்க பேசியுள்ளார்.


இதற்காக முன்பணமாக ரூ.45 லட்சத்தை கொடுப்பதற்காக அப்துல் கபூர் கொண்டு வந்தார். அவரிடம், குற்றாலம் மின்நகர் பகுதிக்கு வருமாறு நாகூர்மீரான் கூறினார்.

ரூ.45 லட்சம் பறிப்பு

இதைத்தொடர்ந்து அப்துல் கபூர் அங்கு பணத்துடன் சென்றார். அப்போது காரில் வந்த நாகூர்மீரான், கழுகுமலை பகுதியைச் சேர்ந்த அனில்குமார் (50), கேரள மாநிலம் கருநாகப்பள்ளியை சேர்ந்த நாசிர் (48), இலஞ்சியைச் சேர்ந்த மணிகண்டன் (29), சதீஷ்குமார் (23) ஆகியோர் அப்துல் கபூரிடம் கத்தியை காட்டி மிரட்டினார்கள். பின்னர் அவர் வைத்து இருந்த ரூ.45 லட்சத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்துல் கபூர் குற்றாலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று பல்வேறு இடங்களில் தேடினார்கள். பின்னர் அவர்கள் 5 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் குற்றாலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. திருச்சி என்.ஐ.டி. பெயரில் போலி வங்கிக்கணக்கு தொடங்கி பண பரிவர்த்தனை போலீசார் விசாரணை
திருச்சி என்.ஐ.டி. பெயரில் போலி வங்கிக்கணக்கு தொடங்கி, வேலை வாங்கி தருவதாக கூறி அந்த கணக்கில் பணம் பெற்று மோசடி நடந்துள்ளது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2. தாலுகா அலுவலகத்தில் இலவச வேட்டி- சேலைகள் திருட்டு ஊழியர்களுக்கு தொடர்பா? போலீஸ் விசாரணை
நாகர்கோவிலில் தாலுகா அலுவலகத்தில் இலவச வேட்டி-சேலைகள் திருட்டு போனது. இதில் ஊழியர்களுக்கு தொடர்பா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. கடலூரில் தபால் நிலையத்தை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர்- போலீசார் இடையே தள்ளுமுள்ளு
கடலூரில் தபால் நிலையத்தை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் போக்குவரத்து காவலர் உள்பட 10 போலீஸ்காரர்கள் காயமடைந்தனர்.
4. மது குடித்ததை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை போலீசார் விசாரணை
தாழக்குடியில் மது குடித்ததை மனைவி கண்டித்ததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
5. குளித்தலை அருகே பரபரப்பு: வேனில் இளம்பெண்ணை கடத்திய வாலிபர் கைது 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு
குளித்தலை அருகே இளம்பெண்ணை வேனில் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.