நடிகர் ஹிருத்திக் ரோசனின் தாய்க்கு கொரோனா


நடிகர் ஹிருத்திக் ரோசனின் தாய்க்கு கொரோனா
x
தினத்தந்தி 23 Oct 2020 3:47 AM IST (Updated: 23 Oct 2020 3:47 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் ஹிருத்திக் ரோசனின் தாயார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மும்பை, 

மும்பையை புரட்டி போட்டு வரும் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் இந்தி திரையுலகினரையும் விடாமல் துரத்தி வருகிறது. ஏற்கனவே நடிகர் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் நடிகர் ஹிருத்திக் ரோசனின் தாயார் பிங்கி ரோசனும் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தகவலை நடிகர் ஹிருத்திக் ரோசனின் தந்தையும், தயாரிப்பாளருமான ராகேஷ் ரோசன் கூறியுள்ளார்.

வீட்டில் தனிமை

இது குறித்து அவர் கூறுகையில், “ஆம் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உண்மைதான். ஆனால் அவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை. தற்போது அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாா்” என்றார்.

நேற்று பிங்கி ரோசனின் பிறந்தநாள் ஆகும். பிறந்தநாள் அன்று குடும்பத்தினருக்கு ஆச்சரியம் அளிக்கும் பரிசை கொடுத்ததாக பிங்கி ரோசன் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அத்துடன் பலூன்கள், பூங்கொத்துகள் படத்தையும் பகிர்ந்து உள்ளார்.

Next Story