கர்நாடகத்தில், இதுவரை 70.60 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை சுகாதாரத்துறை தகவல் + "||" + In Karnataka, so far 70.60 lakh people have been diagnosed with coronary heart disease
கர்நாடகத்தில், இதுவரை 70.60 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை சுகாதாரத்துறை தகவல்
கர்நாடகத்தில் இதுவரை 70 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 7 லட்சத்து 82 ஆயிரத்து 773 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று புதிதாக 5 ஆயிரத்து 778 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 88 ஆயிரத்து 551 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் வரை 10 ஆயிரத்து 696 பேர் கொரோனாவுக்கு இறந்தனர். நேற்று மேலும் 74 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் சாவு எண்ணிக்கை 10 ஆயிரத்து 770 ஆக உயர்ந்து உள்ளது.
கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 36 பேர், கொப்பலில் 5 பேர், மைசூருவில் 4 பேர் உள்பட 74 பேர் இறந்தனர். நேற்று ஒரே நாளில்
13 ஆயிரத்து 550 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 84 ஆயிரத்து 835 ஆக உயர்ந்து உள்ளது. ஒரு லட்சத்து 440 பேர் சிகிச்சையில் உள்ளனர். 940 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். நேற்று ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 354 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 70 லட்சத்து 60 ஆயிரத்து 189 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
மதுரை சித்திரை திருவிழா இந்த ஆண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப் போலவே கோவில் வளாகத்திற்குள் உள் திருவிழாவாக நடைபெறும் என்று கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.