உத்திரமேரூர் அருகே கடன் தொல்லையால் லாரி உரிமையாளர் தற்கொலை


உத்திரமேரூர் அருகே கடன் தொல்லையால் லாரி உரிமையாளர் தற்கொலை
x
தினத்தந்தி 22 Oct 2020 11:19 PM GMT (Updated: 2020-10-23T04:49:42+05:30)

உத்திரமேரூர் அருகே கடன் தொல்லையால் லாரி உரிமையாளர் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

உத்திரமேரூர், 

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த ஏ.பி. சத்திரத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் பிரபாகரன் (வயது 27). லாரி உரிமையாளர். கடந்த சில மாதங்களாக தொழில் சரியாக நடைபெறாததால் கடன் அதிகமானதாக கூறப்படுகிறது.

கடன் தொல்லையால் மிகுந்த மன உளைச்சல் அடைந்த அவர் நேற்றுமுன்தினம் அரளி விதையை அரைத்து குடித்தார்.

சாவு

வாந்தி எடுத்து மயங்கிய நிலையில் இருந்த அவரை உடனடியாக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story