திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை திருட்டு


திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 23 Oct 2020 5:12 AM IST (Updated: 23 Oct 2020 5:12 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை திருடப்பட்டது.

திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் போளிவாக்கம் நந்தவனம் பகுதியை சேர்ந்தவர் ரேணுகாகாந்தி (வயது 41). இவர் நேற்று முன்தினம் காலை 10 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு மணவாள நகரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். மதியம் 12 மணிக்கு வீட்டுக்கு வந்து பார்த்தார்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

நகை திருட்டு

உள்ளே சென்று பார்த்தபோது துணிமணிகள் ஆங்காங்கு சிதறி கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த 8 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து ரேணுகா காந்தி மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story