ஸ்ரீவைகுண்டத்தில் மினிலாரியுடன் 21 ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் போலீசார் விசாரணை


ஸ்ரீவைகுண்டத்தில் மினிலாரியுடன் 21 ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 23 Oct 2020 4:51 PM GMT (Updated: 23 Oct 2020 4:51 PM GMT)

ஸ்ரீவைகுண்டத்தில் மினிலாரியுடன் 21 ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் போலீசார் விசாரணை.

ஸ்ரீவைகுண்டம், 

ஸ்ரீவைகுண்டம் பகுதியில், ரேஷன் அரிசியை வீடு வீடாக சென்று குறைந்த விலைக்கு வாங்கி அதனை கேரளா உள்ளிட்ட பிற மாநில பகுதிகளில் கூடுதல் விலைக்கு சிலர் விற்று வருவதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தலைமையில் வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார், கிராம உதவியாளர் கணேசன் ஆகியோர் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வீடுகளில் ரேஷன் அரிசியை 21 மூட்டைகளில் சேகரித்து ஸ்ரீவைகுண்டத்தில் மினி லாரியில் வைக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. அந்த மினி லாரியை வருவாய் துறையினர் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதில் தொடர்புடைய நபர்களை ஸ்ரீவைகுண்டம் போலீசார் தேடிவருகின்றனர்.



Next Story