மராட்டியத்தில் புதிதாக 7 ஆயிரத்து 347 பேருக்கு கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்து 247 பேர் குணமடைந்தனர்
மராட்டியத்தில் புதிதாக 7 ஆயிரத்து 347 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 13 ஆயிரத்து 247 பேர் குணமடைந்தனர்
மும்பை,
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 7 ஆயிரத்து 347 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மாநிலத்தில் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 லட்சத்து 32 ஆயிரத்து 544 ஆகி உள்ளது.
மாநிலத்தில் தொற்று பாதிப்பில் இருந்து குணமானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் நேற்று மட்டும் 13 ஆயிரத்து 247 பேர் குணமாகி ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். மாநிலத்தில் இதுவரை 14 லட்சத்து 45 ஆயிரத்து 103 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமாகி இருக்கிறார்கள். தற்போது 1 லட்சத்து 43 ஆயிரத்து 922 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
184 பேர் பலி
மாநிலத்தில் மேலும் 184 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதுவரை மராட்டியத்தில் தொற்றுக்கு 43 ஆயிரத்து 15 பேர் உயிரிழந்து உள்ளனர். மாநிலம் முழுவதும் மொத்தம் 84 லட்சத்து 79 ஆயிரத்து 155 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 19.29 சதவீதம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தில் 24 லட்சத்து 38 ஆயிரத்து 245 பேர் வீடுகளிலும், 13 ஆயிரத்து 545 பேர் தனிமை மையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story