மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் மேலும் 158 பேருக்கு கொரோனா தொற்று + "||" + Another 158 people were infected with corona in Pondicherry

புதுச்சேரியில் மேலும் 158 பேருக்கு கொரோனா தொற்று

புதுச்சேரியில் மேலும் 158 பேருக்கு கொரோனா தொற்று
புதுச்சேரியில் மேலும் 158 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி, 

புதுவை மாநிலத்தில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 784 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 158 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 216 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திருபுவனை மூகாம்பிகை நகரை சேர்ந்த 47 வயது பெண்ணும், ஜிப்மரில் தட்டாஞ்சாவடி வீமன் நகரை சேர்ந்த 72 வயது முதியவரும் பலியாகி உள்ளனர்.

தொடர் சிகிச்சை

புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 2 லட்சத்து 82 ஆயிரத்து 40 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 2 ஆயிரத்து 44 ஆயிரத்து 463 பேருக்கு தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டது. 33 ஆயிரத்து 986 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

அவர்களில் 3 ஆயிரத்து 975 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அதாவது 1,548 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 2 ஆயிரத்து 427 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 29 ஆயிரத்து 427 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உயிரிழப்பு

இதுவரை 584 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 482 பேர் புதுச்சேரியையும், 54 பேர் காரைக்காலையும், 42 பேர் ஏனாமையும், 6 பேர் மாகியையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புதுவையில் உயிரிழப்பு 1.72 சதவீதமாகவும், குணமடைவது 86.59 சதவீதமாகவும் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வேகமான பாய்ச்சலில் கொரோனா: பாதிப்பு, உயிரிழப்பு தொடர்ந்து அதிகரிப்பு
தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
2. மேலும் 112 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 112 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டது.
3. புதிதாக 235 பேருக்கு கொரோனா
மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நேற்றும் ஒரே நாளில் 235 பேர் பாதிக்கப்பட்டனர்
4. கரூர் மாவட்டத்தில் 1 வயது குழந்தை உள்பட புதிதாக 46 பேர் கொரோனா
கரூர் மாவட்டத்தில் 1 வயது குழந்தை உள்பட புதிதாக 46 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
5. ஒரே நாளில் 63 பேருக்கு கொரோனா
சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 63 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.