மரக்காணம் பள்ளி மாணவன் கொலை: கைதான வாலிபருக்கு மேலும் 3 கொலைகளில் தொடர்பு?


மரக்காணம் பள்ளி மாணவன் கொலை: கைதான வாலிபருக்கு மேலும் 3 கொலைகளில் தொடர்பு?
x
தினத்தந்தி 23 Oct 2020 10:40 PM GMT (Updated: 2020-10-24T04:10:33+05:30)

மரக்காணம் பள்ளி மாணவன் கொலையில் கைதான வாலிபருக்கு மேலும் 3 கொலைகளில் தொடர்பு இருக்கலாம் என்பதால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மரக்காணம், 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள நொச்சிக்குப்பத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 48). மீனவர். இவரது மகன் தேவன்ராஜ் (13) கடந்த 8-ந் தேதி திடீரென மாயமானான். இது குறித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குறிஞ்சி செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த அபினேஷ் என்பவர் தேவன்ராஜை கொலை செய்து கடற்கரையோரம் சவுக்குத் தோப்பில் குழிதோண்டி புதைத்தது தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரித்ததில் தேவன்ராஜை கொன்று பிணத்துடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக போலீசில் அபினேஷ் திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.

இரு குடும்பத்தினருக்கிடையே இருந்த முன் விரோதத்துக்கு பழிவாங்குவதற்காக இந்த கொலை செய்ததும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு சிறுவன் ரினேஷ் என்பவனை கடந்த ஆண்டு அபினேஷ் கொலை செய்ததும் அம்பலமானது.

மேலும் 3 கொலையில் தொடர்பு?

இதனை தொடர்ந்து போலீசார், அபினேசை திண்டிவனம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தநிலையில்அந்த பகுதியில் நடந்த மேலும் 3 கொலைகளில் அபினேசுக்கு தொடர்பு இருக்கலாம் என்று கருதுவதால் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக திண்டிவனம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர். அபினேசிடம் விசாரணை நடத்தினால் மேலும் பல திடுக்கிடும் தகவல் வெளியாகும் என தெரிகிறது.

Next Story