மும்பையில் கொரோனா பாதிப்பு 2½ லட்சத்தை தாண்டியது
மும்பையில் கொரோனா பாதிப்பு 2½ லட்சத்தை தாண்டி உள்ளது.
மும்பை,
மும்பையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அதே நேரத்தில் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகவே உள்ளது. நேற்று நகரில் புதிதாக 1,257 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நகரில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2½ லட்சத்தை தாண்டி உள்ளது. மும்பையில் இதுவரை 2 லட்சத்து 50 ஆயிரத்து 59 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 538 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 17 ஆயிரத்து 977 பேர் வைரஸ் நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாராவி
நகரில் மேலும் 50 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதனால் நகரில் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 59 ஆக அதிகரித்து உள்ளது.
தாராவியில் புதிதாக 6 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 3 ஆயிரத்து 483 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story