தஞ்சை அருகே ஜனசதாப்தி ரெயில் நடுவழியில் நிறுத்தம் என்ஜினில் இருந்து புகை வந்ததால் பரபரப்பு


தஞ்சை அருகே ஜனசதாப்தி ரெயில் நடுவழியில் நிறுத்தம் என்ஜினில் இருந்து புகை வந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 25 Oct 2020 8:52 AM IST (Updated: 25 Oct 2020 8:52 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே ஜனசதாப்தி ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. என்ஜினில் இருந்து புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்,

மயிலாடுதுறையில் இருந்து கோவைக்கு ஜனசதாப்தி ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் மயிலாடுதுறையில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு மாலை 3.43 மணிக்கு தஞ்சைக்கு வரும். தஞ்சையில் இருந்து 3.45 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு கோவையை சென்றடையும். வழக்கம் போல நேற்று மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்ட ரெயில் தஞ்சைக்கு மதியம் 3.58 மணிக்கு வந்தடைந்தது. தஞ்சையில் இருந்து 4 மணிக்கு புறப்பட்டது. தஞ்சையை அடுத்த ஆலக்குடி அருகே ரெயில்சென்ற போது திடீரென முதல்பெட்டிக்கும், என்ஜினுக்கும் இடையே திடீரென புகை வந்தது.

நடுவழியில் நிறுத்தம்

இதனால் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. ரெயிலில் பயணம் செய்த பயணிகள் புகை வந்ததால் அலறியடித்துக்கொண்டு இறங்கினர். இதையடுத்து என்ஜின்டிரைவர் கீழே இறங்கி பார்த்த போது என்ஜினில் மாடு அடிபட்டு சிக்கி இருந்ததால் புகை வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மாடு அப்புறப்படுத்தப்பட்டது.

இதையடுத்து பயணிகள் நிம்மதி அடைந்தனர். இதையடுத்து ரெயில் புறப்பட்டு சென்றது. தஞ்சை அருகே நடுவழியில் ரெயில் 10 நிமிடம் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story