சேலத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 56 ரவுடிகள் கைது
சேலத்தில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 56 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
சேலம்,
சேலத்தில் குற்றச்செயல்களை தடுக்க மாநகர போலீஸ் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கட்ட பஞ்சாயத்து உள்ளிட்ட குற்றங்களில் ரவுடிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமாருக்கு புகார் வந்தது.
இதையடுத்து ரவுடிகளை கூண்டோடு கைது செய்ய போலீஸ் அதிகாரிகளுக்கு கமிஷனர் உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு சோதனை நடத்தி கொலை, கொள்ளை, வழிப்பறி என பல்வேறு குற்றப்பிண்ணனி கொண்ட ரவுடிகளை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த சோதனை விடிய, விடிய நடந்தது.
56 ரவுடிகள் கைது
இதஉெ-டி சேலம் அன்னதானப்பட்டி, அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, சூரமங்கலம், கிச்சிப்பாளையம் என மாநகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 56 ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதன் முடிவு வந்த பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொள்வார்கள். மேலும் ரவுடிகளை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாக உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story