தூத்துக்குடி அருகே பரிதாபம்: ஒரு வயது குழந்தை ‘திடீர்’ சாவு


தூத்துக்குடி அருகே பரிதாபம்: ஒரு வயது குழந்தை ‘திடீர்’ சாவு
x
தினத்தந்தி 26 Oct 2020 9:30 PM GMT (Updated: 26 Oct 2020 5:05 PM GMT)

தூத்துக்குடி அருகே கீழதட்டப்பாறையில் ஒரு வயது ஆண் குழந்தை நேற்று திடீரென பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே உள்ள கீழதட்டப்பாறையை சேர்ந்தவர் சிவபெருமாள். கூலித் தொழிலாளி. இவருடைய மகன் மாரீஸ் (வயது 1). இந்த குழந்தைக்கு நேற்று மதியம் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் உடனடியாக பெற்றோர் தனது குழந்தையை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை வழியிலேயே பரிதாபமாக இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, குழந்தை இறந்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு வயது குழந்தை திடீரென இறந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story