மாவட்ட செய்திகள்

திருவெண்ணெய்நல்லூர் அருகே சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம் + "||" + Seedling nut public protest on a muddy and muddy road near Thiruvennallur

திருவெண்ணெய்நல்லூர் அருகே சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே சேறும், சகதியுமான சாலையில் பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசூர், 

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள காந்தலவாடி கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து அரசூர் செல்லும் சாலையில் குளத்துதெரு உள்ளது. இந்த தெருவில் சாலை வசதி செய்து கொடுக்கப்படாததால் கடந்த 2 ஆண்டுகளாக சேறும், சகதியுமாக வயல்வெளி போன்று உள்ளது.இதனால் அப்பகுதியை சேர்ந்த குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் சேற்றில் நடந்து செல்லும் அவல நிலை இருந்து வருகிறது. மேலும் அப்பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரினால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பலவித தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. இந்த சாலையில் அங்கன்வாடி மையம் உள்ளதால் அம்மையத்திற்கு செல்லும் குழந்தைகள் சேற்றில் விழுந்து காயமடையும் நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் உடனடியாக சாலை வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் இதுநாள் வரையிலும் சாலை வசதி செய்து தரப்படவில்லை.

நாற்று நடும் போராட்டம்

இந்நிலையில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை அப்பகுதியில் திரண்டு அங்குள்ள சேறும், சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாலை வசதி செய்து தரக்கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர். மேலும் இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தஞ்சை தபால் நிலையத்தை 3-வது நாளாக முற்றுகை; 40 பேர் கைது
தஞ்சையில் 3-வது நாளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தபால் நிலையத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 10 பெண்கள் உள்பட 40 பேர் கைது செய்யப்பட்டனர். மத்திய கலால் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர் சங்கத்தினர், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
2. தஞ்சையில் கல்லணைக்கால்வாய் கரையில் புதர்கள் அகற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
தஞ்சையில் கல்லணைக்கால்வாய் கரையில் புதர்கள் அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
3. திருச்சியில் இருந்து டெல்லிக்கு ரெயிலில் செல்ல முயன்ற 48 விவசாயிகள் கைது
திருச்சியில் இருந்து அய்யாக்கண்ணு தலைமையில் ரெயிலில் டெல்லிக்கு செல்ல முயன்ற 48 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
4. ஓய்வூதியம் வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் மறியல் நாகர்கோவிலில் 96 பேர் கைது
அடையாள அட்டை உள்ள அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கக்கோரி நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள் 96 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக தபால் நிலையத்தை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர்
விவசாய சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக திருப்பூர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 80 பேரை போலீசார் கைது செய்தனர்.