மாவட்ட செய்திகள்

பரோலில் வந்துள்ள பேரறிவாளன் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார் + "||" + Perarivalan, who was on parole, returned home after treatment

பரோலில் வந்துள்ள பேரறிவாளன் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்

பரோலில் வந்துள்ள பேரறிவாளன் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பரோலில் வந்துள்ள பேரறிவாளன், சிறுநீரகத் தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
ஜோலார்பேட்டை,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் தண்டனை பெற்று 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். வயது மூப்பில் உள்ள பெற்றோருடன் இருக்க அவரது தாயார் அற்புதம்மாள் பேரறிவாளனுக்கு பரோல் கேட்டு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அதன் அடிப்படையில் ஒரு மாத பரோலில் 3-வது முறையாக கடந்த 9-ந்தேதி சென்னை புழல் சிறையில் இருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் காவலுடன் ஜோலார்பேட்டையில் உள்ள தனது இல்லத்திற்கு பேரறிவாளன் வந்தார்.

அதைத்தொடந்து அவரது வீட்டை சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பரோலில் வந்துள்ள பேரறிவாளனை ரத்த சம்பந்தமான உறவுகளை தவிர்த்து வெளியாட்கள் பார்ப்பதற்கு அனுமதியில்லை. கொரோனா தொற்று காரணமாக பேரறிவாளன் வீட்டிலிருந்து போலீஸ் நிலையம் வந்து கையெழுத்திடுவதை தவிர்த்து, நாள் தோறும் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து தலைமையில் போலீசார், பேரறிவாளன் வீட்டிற்கு சென்று கையெழுத்து வாங்கி வருகின்றனர்.

சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்

மேலும் பேரறிவாளனுக்கு சிறுநீரக தொற்று காரணமாக சிறையில் இருக்கும் போது அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மருத்துவரின் ஆலோசனைப்படி நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு இன்ஸ்பெக்டர் பழனிமுத்து தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் காவலுடன் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பேரறிவாளன் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து 6 மணி நேரம் சிகிச்சை பெற்ற அவர் நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு ஜோலார்பேட்டையில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு திரும்பினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட பரோலை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு
பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட பரோலை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2. ஜெயிலில் இருந்து பரோலில் வந்த பேரறிவாளனுக்கு விழுப்புரத்தில் சிகிச்சை
ஜெயிலில் இருந்து பரோலில் வந்த பேரறிவாளனுக்கு விழுப்புரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
3. கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதில் 4 ஆயுர்வேத மருந்துகள் பயனுள்ளதாக உள்ளது - அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம்
கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதில் 4 ஆயுர்வேத மருந்துகள் பயனுள்ளதாக உள்ளது என்று அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் தெரிவித்துள்ளது.
4. நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் 5 ஆண்டுகளில் 1,450 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் சிகிச்சை
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 5 ஆண்டுகளில் 1,450 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் சிகிச்சை செய்து இருக்கிறோம் என டீன் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
5. கொரோனாவுக்கு சிகிச்சை முலாயம்சிங் உடல்நிலையில் முன்னேற்றம்
கொரோனாவுக்கு சிகிச்சை முலாயம்சிங் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.