நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் 71 பேருக்கு கொரோனா தொற்று


நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் 71 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 27 Oct 2020 5:20 AM GMT (Updated: 27 Oct 2020 5:20 AM GMT)

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் நேற்று 71 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்து வருகிறது. நேற்று புதிதாக 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,106-ஆக உள்ளது. இதில் 13,589 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 309 பேர் தற்போது பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 50 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

தென்காசி மாவட்டத்திலும் கொரோனா குறைந்து விட்டது. நேற்று 3 பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டது. இவர்கள் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7, 791-ஆக உயர்ந்துள்ளது. இதில் 7,513 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தற்போது 125 பேர் தென்காசி மற்றும் நெல்லை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தென்காசியை சேர்ந்த 52 வயது முதியவர் கொரோனா சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 20-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் அவர் இறந்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 38 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13,817-ஆக உள்ளது. அதே போன்று கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 14,188-ஆக அதிகரித்து உள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 500 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 129 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்து உள்ளனர்.

Next Story