கர்நாடக மேல்சபையில் காலியாக உள்ள ஆசிரியர்-பட்டதாரி தொகுதிகளுக்கு இன்று தேர்தல்
கர்நாடக மேல்சபையில் காலியாக உள்ள ஆசிரியர்-பட்டதாரி தொகுதிகளுக்கு இன்று (புதன்கிழமை) தேர்தல் நடக்கிறது.
பெங்களூரு,
கர்நாடக மேல்-சபையில் கர்நாடக தென்கிழக்கு பட்டதாரிகள், கர்நாடக மேற்கு பட்டதாரிகள், பெங்களூரு ஆசிரியர்கள், கர்நாடக வடகிழக்கு ஆசிரியர்கள் ஆகிய 4 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த 4 தொகுதிகளுக்கு வருகிற 28-ந் தேதி (நாளை) தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கடந்த 9-ந் தேதி அறிவித்தது.
இதில் 4 தொகுதிகளிலும் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. மொத்தம் 40 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலுக்கான பகிரங்க பிரசாரம் நேற்று முன்தினம் ஓய்ந்தது. கடைசி நாளில் வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளின் தலைவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகளை சந்தித்து ஆதரவு திரட்டினர். இந்த நிலையில் மேல்-சபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று (புதன்கிழமை) நடக்கிறது.
549 வாக்குச்சாவடிகள்
இந்த தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 549 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 501 பேர் வாக்களிக்க தகுதி படைத்தவர்கள் ஆவார்கள். இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 2-ந் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.
Related Tags :
Next Story