கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அரசு ஊழியர் சம்மேளனம் ஆர்ப்பாட்டம்


கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அரசு ஊழியர் சம்மேளனம் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Oct 2020 8:36 AM IST (Updated: 28 Oct 2020 8:36 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அடுத்த மாதம் 26-ந் தேதி நாடு தழுவிய அளவில் மத்திய அரசு ஊழியர் சம்மேளனம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.

புதுச்சேரி, 

மத்திய அரசின் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், புதிய பதவிகளை உருவாக்குவதற்கு உள்ள தடையை நீக்குவது, காலி பணியிடங்களை நிரப்புவது, தினக்கூலி, ஒப்பந்த, தொகுப்பூதிய, வவுச்சர் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்வது மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி நிறுவன ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை புதுச்சேரி அரசு வழங்க வேண்டும் என்று அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் வலியுறுத்தி வருகிறது.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அடுத்த மாதம் 26-ந் தேதி நாடு தழுவிய அளவில் மத்திய அரசு ஊழியர் சம்மேளனம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது. இதை அரசுக்கு தெரிவிக்கும் வகையில் அரசு ஊழியர் சம்மேளனம் சார்பில் புதுவை அண்ணா சிலை அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சம்மேளன தலைவர் பிரேமதாசன் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் பாலமோகனன் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், அமைப்பு செயலாளர்கள் மோகனகிருஷ்ணன், கிறிஸ்டோபர், ஆனந்தகணபதி, சேகர் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷமிட்டனர்.

Next Story