லஞ்சப் புகார்களை நேரடியாக தரலாம் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அகன்ஷா யாதவ் தகவல்


லஞ்சப் புகார்களை நேரடியாக தரலாம் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அகன்ஷா யாதவ் தகவல்
x
தினத்தந்தி 28 Oct 2020 3:41 AM GMT (Updated: 28 Oct 2020 3:41 AM GMT)

லஞ்சம் தொடர்பான புகார்களை நேரடியாக தரலாம் என்று சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அகன்ஷா யாதவ் கூறினார்.

புதுச்சேரி, 

புதுவையில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வார விழாவினை தொடங்கி உள்ளோம். கொரோனா காலம் என்பதால் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் செயல்பட்டு வருகிறோம். லஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு வரும் நிலுவை மனுக்கள் தொடர்பாக குறிப்பிட்ட கால அளவுக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

புதுவை காவல்துறையில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறையை பற்றி மக்கள் இன்னும் சரிவர அறிந்துகொள்ளவில்லை. அதன் முதல்கட்டமாக லஞ்ச ஒழிப்பு பிரிவு செயல்படுவதை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல உள்ளோம்.

நேரடியாக தரலாம்

லஞ்சம் தொடர்பான புகார்களை என்னிடம் நேரடியாகவும் தரலாம். லஞ்ச ஒழிப்பு பிரிவினை 24 மணிநேரமும் அணுகி புகார்களை அளிக்கலாம். மக்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் பற்றி சரியான விழிப்புணர்வு இல்லாததால்தான் சி.பி.ஐ.க்கு செல்கிறார்கள்.

எங்களுக்கு 135 புகார்கள் வந்துள்ளன. காரைக்காலில் நடத்திய முகாமுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. அதனால் 2 மாதத்துக்கு ஒருமுறை லஞ்ச ஒழிப்பு முகாம் நடத்த உள்ளோம். இந்த முகாம் புதுவை மாநிலத்தின் 4 பிராந்தியங்களில் நடைபெறும்.

லஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு என்று தனியாக ஹெல்ப்லைன், இலவச அழைப்பு எண் வசதியை உருவாக்க உள்ளோம். அதற்கான அனுமதியை அரசிடம் கேட்டுள்ளோம். விரைவில் இந்த முறை நடைமுறைக்கு வரும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story