திருத்துறைப்பூண்டி, மன்னார்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


திருத்துறைப்பூண்டி, மன்னார்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Oct 2020 4:28 AM GMT (Updated: 29 Oct 2020 4:28 AM GMT)

திருத்துறைப்பூண்டி, மன்னார்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டி,

மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு (ஓ.பி.சி.) மாணவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். திருத்துறைப்பூண்டி நகர செயலாளர் ஹாஜா வரவேற்றார். முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர் மீனாட்சி சுந்தரம், கோட்டூர் ஒன்றிய செயலாளர் கவாஸ்கர், கூத்தாநல்லூர் நகர செயலாளர் ராபின்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோஷங்கள்

ஆர்ப்பாட்டத்தில் நாகை நாடாளுமன்ற தொகுதி செயலாளர் இடிமுரசு, மாநில துணைச் செயலாளர்கள் பூமிநாதன், முருகையன், இஸ்லாமியர் பேரவை மாவட்ட அமைப்பாளர் முகமதுஹசன், வெல்லிமலை ரமேஷ், ராகவன், ஆனந்த், அந்தோணி, பரமசிவம், சிறுத்தை செல்வம், எழிலூர் கார்த்திக் கலந்துகொண்டு மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு (ஓ.பி.சி.) மாணவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் இளைஞர் எழுச்சி பாசறை நகர அமைப்பாளர் ஜோசப் நன்றி கூறினார்.

மன்னார்குடி

இதேபோல் மன்னார்குடி பெரியார் சிலை அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வன், நகர செயலாளர் அறிவுக்கொடி எழிலரசன், தொழிலாளர் விடுதலை முன்னனி மாநில துணை செயலாளர் ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் பாரிவேந்தன், ஒன்றிய பொருளாளர் தீபக், சட்டமன்ற தொகுதி செயலாளர் ஆதவன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

Next Story