அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 4 ஆண்டுகளாக பராமரிப்பின்றி காணப்படும் கட்டிடம்


அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 4 ஆண்டுகளாக பராமரிப்பின்றி காணப்படும் கட்டிடம்
x
தினத்தந்தி 30 Oct 2020 5:02 AM GMT (Updated: 30 Oct 2020 5:02 AM GMT)

அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள கட்டிடம் 4 ஆண்டுகளாக பராமரிப்பின்றி காணப்படுகிறது.

அந்தியூர், 

அந்தியூர் தவுட்டுப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது. இங்கு அந்தியூர் ஊராட்சி கிராம வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு, சோலார் பயன்பாடு பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது.

தற்போது இந்த கட்டிடத்தில் மரம், செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது.

இதுபற்றி அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் கூறியதாவது:-

இங்கு வரும் பொதுமக்களுக்கு வீட்டில் மழைநீர் சேகரிப்பது குறித்து அதிகாரிகள் விளக்கி கூறி வந்தனர். இதனால் ஏராளமானோர் வருகை தந்தனர். ஆனால் கட்டிடத்தை கடந்த 4 ஆண்டுகளாக முறையாக யாரும் பராமரிக்காததால், பொதுமக்களின் வருகை குறைந்தது. இதனால் அந்த கட்டிடம் பாழடைய தொடங்கியது.

கோரிக்கை

கட்டிடத்தில் மரம், செடி, கொடிகள் வளர்ந்து முட்புதர் மண்டி காணப்படுகிறது. மேலும் பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களின் நடமாட்டமும் இருக்கிறது. பகல் நேரத்திலேயே அதிகமாக காணப்படுகிறது. இதனால் அலுவலகத்துக்கு வருபவர்கள் ஒரு வித அச்சத்துடனே இருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி புதர் மண்டி கிடக்கும் கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story