தூத்துக்குடியில் 57 பேருக்கு கொரோனா நெல்லை-தென்காசியில் 27 பேர் பாதிப்பு


தூத்துக்குடியில் 57 பேருக்கு கொரோனா நெல்லை-தென்காசியில் 27 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 30 Oct 2020 11:26 AM IST (Updated: 30 Oct 2020 11:26 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் 57 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். நெல்லை-தென்காசியில் 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளை சேர்ந்த 57 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 946 ஆக உயர்ந்து உள்ளது.

அதேபோன்று கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 348 ஆக அதிகரித்து உள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 468 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 130 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்து உள்ளனர்.

நெல்லை-தென்காசி

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நேற்று 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் நெல்லை மாநகர பகுதியை சேர்ந்த 6 பேரும், பாளையங்கோட்டை யூனியனை சேர்ந்த 2 பேரும் அடங்குவர். இதுதவிர ராதாபுரம், வள்ளியூர், களக்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்து 176 ஆக உயர்ந்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர்கள் தென்காசி, செங்கோட்டை, கடையம், கடையநல்லூர், கீழப்பாவூர், ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள். இந்த மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்து 810 ஆக அதிகரித்து உள்ளது.

Next Story