தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் நிலக்கரி கையாளுவதில் புதிய சாதனை
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் நிலக்கரி கையாளுவதில் புதிய சாதனை படைத்து உள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்துக்கு ‘எம்.வி.ஓசன் டிரீம்‘ என்ற கப்பல் இந்தோனேஷியா நாட்டில் உள்ள அதாங்பே என்ற துறைமுகத்தில் இருந்து 77 ஆயிரத்து 535 டன் நிலக்கரியுடன் வந்தது. இந்த கப்பல் 229 மீட்டர் நீளமும், 32.26 மீட்டர் அகலமும், 14.20 மீட்டர் மிதவை ஆழமும் கொண்டது. இந்த கப்பல் துறைமுகத்தின் 9-வது கப்பல் தளத்தில் நிறுத்தப்பட்டது.
புதிய சாதனை
தொடர்ந்து கப்பலில் இருந்து நிலக்கரி கையாளும் பணி நடந்தது. இதில் 24 மணி நேரத்தில் 3 நகரும் பளு தூக்கி எந்திரங்கள் மூலம் 56 ஆயிரத்து 687 டன் நிலக்கரி கையாளப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டது. இதற்கு முன்பு அதிகப்பட்சமாக 55 ஆயிரத்து 785 டன் நிலக்கரி கையாளப்பட்டு இருந்தது. சாதனை படைக்க காரணமாக இருந்த துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு எனது பாராட்டுகள். வரும் காலங்களில் இதுபோன்று பல சாதனைகளை படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story