காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பதவியேற்பு


காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பதவியேற்பு
x
தினத்தந்தி 31 Oct 2020 5:26 AM IST (Updated: 31 Oct 2020 5:26 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டராக மகேஸ்வரி ரவிக்குமார் பதவியேற்று கொண்டார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட புதிய பெண் கலெக்டராக மகேஸ்வரி ரவிக்குமார் காஞ்சீபுரத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார். இதற்கு முன்பு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டராக இருந்த பொன்னையா திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

பதவி ஏற்றதும் 2 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவை வழங்கினார்.

மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி முத்துராமலிங்கம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமேகலை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாராயணன், மாவட்ட ஊராட்சி ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கணேசன், மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் பெருமாள் ராஜா, அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவருமான வாலாஜாபாத் கணேசன், காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம், காஞ்சீபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித் குமார் மற்றும் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

புதிதாக பொறுப்பேற்று கொண்ட காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமார், கிருஷ்ணகிரியில் வருவாய் ஆர்.டி.ஓ.வாகவும், தர்மபுரி மாவட்டத்தில் வருவாய்துறை அதிகாரியாகவும், சென்னை மாநகராட்சி துணை ஆணையராகவும், திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக பதவி வகித்து தற்போது காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டராக பதவியேற்றார். இவரது கணவர் ரவிக்குமார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

முன்னதாக உலக புகழ் பெற்ற காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் குடும்பத்தினருடன் சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு அர்ச்சகர்கள் பொன்னாடை அணிவித்து பிரசாதங்களை வழங்கினார்கள்.


Next Story