அரியலூர், பெரம்பலூரில் 14 பேருக்கு கொரோனா தொற்று


அரியலூர், பெரம்பலூரில் 14 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 1 Nov 2020 5:18 AM IST (Updated: 1 Nov 2020 5:18 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர், பெரம்பலூரில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பெரம்பலூர் வட்டாரத்தில் 2 பேரும், வேப்பூர், ஆலத்தூர் ஆகிய வட்டாரங்களில் தலா ஒருவரும் என மொத்தம் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,138 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் ஏற்கனவே 21 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.

மேலும் மருத்துவமனைகளில் இருந்து இதுவரைக்கும் 2,071 பேர் டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில், தற்போது 46 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 366 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அரியலூரில்...

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் நேற்று அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 3 பேருக்கும், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேருக்கும், செந்துறை, தா.பழூர், ஜெயங்கொண்டம் ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும், அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியிலும், வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களிலும் தலா ஒருவருக்கும் என மொத்தம் 10 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,374 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே கொரோனாவிற்கு மாவட்டத்தில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு தற்போது 396 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் மொத்தம் 3,931 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மேலும் 299 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

Next Story