கரூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு ஒரே நாளில் 24 பேருக்கு தொற்று


கரூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு ஒரே நாளில் 24 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 1 Nov 2020 6:15 AM IST (Updated: 1 Nov 2020 6:15 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.

கரூர், 

தமிழகத்தில் பல்வேறு ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டனர். கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை அனைத்து கடைகளும், தொழில் நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. இதனால் சாலைகளில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் போக்குவரத்தும் அதிகரித்துவிட்டது. பொதுமக்களும் அனைத்து இடங்களுக்கும் சென்று வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக 10-க்கும் குறைவான எண்ணிக்கையிலேயே கொரோனா பாதிப்பு இருந்தது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென மீண்டும் அதிகரித்து உள்ளது.

24 பேருக்கு கொரோனா

நேற்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மணவாசியை சேர்ந்த 24 வயது பெண், காந்திகிராமத்தை சேர்ந்த 53 வயது ஆண், 13 வயது சிறுவன், சேந்தமங்கலத்தை சேர்ந்த 54 வயது ஆண், தென்னிலையை சேர்ந்த 23 வயது ஆண், கடவூரை சேர்ந்த 34 வயது ஆண், வெங்கமேட்டை சேர்ந்த 34 வயது ஆண், வெள்ளியணையை சேர்ந்த 32 வயது பெண், 22 வயது பெண், தோகைமலையை சேர்ந்த 37 வயது பெண், காகிதபுரத்தை சேர்ந்த 30 வயது வாலிபர் மற்றும் 28 வயது பெண், 49 வயது பெண், அரவக்குறிச்சியை சேர்ந்த 43 வயது ஆண், 27 வயது ஆண் உள்பட 24 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 7 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.

Next Story