நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் 67 பேருக்கு கொரோனா பாதிப்பு
நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. நேற்று 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
தென்காசி,
நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. நேற்று 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் நெல்லை மாநகர பகுதியை சேர்ந்தவர்கள் 8 பேர். பாளையங்கோட்டை யூனியன் பகுதியை சேர்ந்தவர்கள் 3 பேர். மற்றவர்கள் அம்பை உள்ளிட்ட ஊர்களை சேர்ந்தவர்கள். மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவரை 14 ஆயிரத்து 209 ஆக உயர்ந்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் நேற்று 10 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர்கள் தென்காசி, கீழப்பாவூர், சங்கரன்கோவில், செங்கோட்டை, ஆலங்குளம் ஆகிய ஊர்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள். மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை 7,823 ஆக உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளை சேர்ந்த 42 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 60 ஆக உயர்ந்துள்ளது.
அதே போன்று கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 14 ஆயிரத்து 477 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 453 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 130 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்து உள்ளனர்.
Related Tags :
Next Story