நீடாமங்கலம் அருகே வீரனார்கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு மர்மநபர்களுக்கு வலைவீச்சு
நீடாமங்கலம் அருகே வீரனார்கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
நீடாமங்கலம்,
நீடாமங்கலம் அருகே உள்ள சித்தமல்லி மேல்பாதி ஊராட்சி கீழத்தெருவில் வீரனார்கோவில் உள்ளது. இக்கோவிலை கீழத்தெரு கிராமமக்கள் சீரமைத்து ஆண்டுதோறும் திருவிழா நடத்தி வருவது வழக்கம். தற்போது கொரோனா காலம் என்பதால் கடந்த ஆண்டு வீரனார் கோவிலில் திருவிழா நடைபெறவில்லை. இக்கோவிலில் பக்தர்கள் வேண்டுதலின் பேரில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து வருபவர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றி கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தி வருவதும் வழக்கம்.
பணம் திருட்டு
இந்தநிலையில் கடந்த 29-ந்தேதி இரவு மர்மநபர்கள் கோவில் கிரில் கேட்டில் உள்ள பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த பணத்தை திருடி சென்றுவிட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியலில் இருந்த பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story