திருவாரூரில், கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி டெல்டாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது
திருவாரூரில், கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியானார்கள். டெல்டாவில், ஒரே நாளில் 117 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் நேற்று மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 343 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 57 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். தற்போது 260 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 220 பேர் பலியாகி உள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 42 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,632 ஆக உயர்ந்துள்ளது. 60 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 60 வயது, 76 வயது ஆண் ஆகிய 2 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை 99 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். தற்போது 365 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாகை
நாகை மாவட்டத்தில் நேற்று மேலும் 43 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 721 ஆக உயர்ந்தது. நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 115 பேர் பலியாகி உள்ளனர். தற்போது வரை 326 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்டா மாவட்டங்களில் இதுவரை கொரோனா தொற்றால் 31 ஆயிரத்து 696 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 30 ஆயிரத்து 311 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 434 பேர் பலியாகி உள்ளனர். தற்போது 951 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Related Tags :
Next Story